News அவுஸ்திரேலியாவில் காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண்

அவுஸ்திரேலியாவில் காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண்

-

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த 69 வயதான ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகள் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்துள்ளதால், நீதிமன்றம் அவரை பரோலில் செல்ல அனுமதித்துள்ளது.

ஜூடித் ஆன் வென் தமது கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்துள்ளார். இதனால் தூக்கமின்மை, தனிமைப்படுத்தப்பட்டு அவநம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார்.

அத்துடன், கணவரை கவனிக்க மறுத்துள்ளார். இதனால் 18 மாதங்களில் அவருக்கிருந்த உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 20,000 டொலர் செலவிட்டு, படகு ஒன்றை லான்ஸ் வென் வாங்க, அது குடும்பத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே, தமது கணவர் பயன்படுத்திவந்த மாத்திரைகளில் 50 எண்ணிக்கையை சூப்பில் கலந்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த லான்ஸ் வென் கை நரம்பையும் ஜூடித் ஆன் வெட்டி விட, இறுதியில் உடற்கூறு ஆய்வில், மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதே மரண காரணம் என உறுதி செய்யப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.