Apple நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மொடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மொடல்களின் வெளியீட்டு திகதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் திகதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த திகதியில் எந்த மொடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், Apple நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மொடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த திகதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மொடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மொடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மொடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட வடிவ மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.