News20 நிமிடங்களில் நான்கு போத்தல் தண்ணீர் குடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

20 நிமிடங்களில் நான்கு போத்தல் தண்ணீர் குடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

-

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மக்கள் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

45 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மாலை வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.

தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 மில்லிலீற்றர் தண்ணீரை- அதாவது 4 போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் தெரிவிக்கையில்,

வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடங்களில் சுமார் 2 லீற்றர் தண்ணீர் குடித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் பிளேக் ப்ரோபெர்க் தெரிவிக்கையில்,

இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள்.

உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...