Newsதிருமண நிகழ்விற்குள் நுழைந்த கரடி - ஏற்பட்ட பரபரப்பு

திருமண நிகழ்விற்குள் நுழைந்த கரடி – ஏற்பட்ட பரபரப்பு

-

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் இடம்பெற்றது.

இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.

அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்து விட்டது. இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.

பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டியுள்ளனர். அதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நன்றி தமிழன்

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...