Newsபயணப்பையில் வைத்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமி

பயணப்பையில் வைத்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமி

-

பிலிப்பைன்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 8 வயது சிறுமி ஒருவர் பயணப்பையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான cctv காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுமி கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் சிறுமி இல்லாததை கண்டு உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளர்.

இதன்போது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணப்பை ஒன்றை கொண்டு சென்ற நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பயணப்பையில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...