வங்கிகள் உட்பட பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீதான உயர் வரியை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொழிலாளர் கட்சி மாநாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம், சுரங்கம், வனம் மற்றும் எரிசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், 2041ம் ஆண்டுக்குள் 511 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும், அந்த பணத்தில் 7,50,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்ட முடியும் என்றும் அந்த பிரேரணை கூறுகிறது.
எவ்வாறாயினும், இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், வர்த்தகங்கள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், வரிச்சுமை சாதாரண மக்கள் மீது விழும் என்றும் தொழிற்கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாறாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வீட்டு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.