Cinema தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

-

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஒகஸ்ட் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.