ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களை பாதிக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் முக்கிய திருத்தம் செய்துள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்குப் பதிவு செய்து, குறுகிய காலத்திற்குள் மாற்றிக் கொள்ளும் வசதி ரத்து செய்யப்படும்.
கல்வி நிறுவனங்கள் தங்கள் முதல் பதிவு செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் 06 மாதங்களுக்கு முன்னர் மாணவர்களை வேறொரு பாடத்திற்கு பதிவு செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சில மாணவர்கள் இந்த சலுகையை தவறாக பயன்படுத்துவதே இதற்கு காரணம்.
இதனிடையே, எதிர்காலத்தில் மாணவர் விசாக்களில் பல மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி விசா விண்ணப்பத்தின் போது டெபாசிட்களில் காட்டப்பட வேண்டிய ஷோ மணி விதிமுறைகளும் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.