ஆஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 3 அங்குல நீளமுள்ள புழுவை மருத்துவ நிபுணர்கள் குழு அகற்றியுள்ளது.
மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது இதுவே முதல் முறை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெண்ணின் மூளையின் முன்பகுதியில் அறுவை சிகிச்சை செய்தபோது, திசுக்களில் சிவப்பு புழு இருப்பது கண்டறியப்பட்டது.
இரத்த நிறமுடைய ஒட்டுண்ணி சுமார் இரண்டு மாதங்கள் பெண்ணின் மூளையில் இருந்ததாக நம்பப்படுகிறது.
இதன் மூலம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அறுவைசிகிச்சை அறையில் இருந்த அனைவரும் தாங்கள் பார்த்ததை பார்த்து ஆச்சரியமடைந்ததாக பெண்ணின் அறுவை சிகிச்சையில் கலந்து கொண்ட டாக்டர் சஞ்சய் சேனாநாயக்க தெரிவித்தார்.