தற்போது அவுஸ்திரேலியாவில் அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கோரி இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளது.
நீல் பார்ரா ஆகஸ்ட் 1 ஆம் தேதி விக்டோரியாவின் பல்லாரத்தில் இருந்து இந்த நடைபயணத்தை தொடங்கினார்.
1,000 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சிட்னிக்கு வந்திருந்தார்.
12,500க்கும் மேற்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 19,000 கையெழுத்துகளுடன் கூடிய மனு ஒன்றையும் நீல் பாரா கொண்டுவந்து, அது சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற நீல் பாரா மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது 3 பிள்ளைகள், ஏறக்குறைய 9 வருடங்களாக வீசா எதுவுமின்றி நாட்டில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.