கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்டதாக (1.046 மீட்டர்) இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜீயஸிற்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜீயஸ் உயிர் பிழைக்க வைக்க வலது காலை நீக்க வேண்டிய நிலையில் மருத்துவர்கள் கடந்த 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அடுத்த 3 நாட்களில் லேசான காய்ச்சலும் ஜீயஸிற்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜீயஸிற்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததும், அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்திருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(12) காலை ஜீயஸ் உயிரிழந்துள்ளது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.