Newsஉலகின் மிக உயரமான நாய் உயிரிழந்தது

உலகின் மிக உயரமான நாய் உயிரிழந்தது

-

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்டதாக (1.046 மீட்டர்) இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜீயஸிற்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜீயஸ் உயிர் பிழைக்க வைக்க வலது காலை நீக்க வேண்டிய நிலையில் மருத்துவர்கள் கடந்த 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அடுத்த 3 நாட்களில் லேசான காய்ச்சலும் ஜீயஸிற்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜீயஸிற்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததும், அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்திருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(12) காலை ஜீயஸ் உயிரிழந்துள்ளது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Latest news

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...

காளான்களை சாப்பிட விரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கான சுகாதார ஆலோசனை

காளான் வளரும் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு வகையான காளான்களை உண்ணும்போது கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நேரத்தில் நாடு முழுவதும் காளான்...

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற இந்தக் குற்றச் செயல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர்...

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...