Cinemaவெளியான Bigg Boss தமிழ் சீசன் 7-ன் போட்டியாளர்கள் பட்டியல்

வெளியான Bigg Boss தமிழ் சீசன் 7-ன் போட்டியாளர்கள் பட்டியல்

-

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் திகதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ஆம் திகதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதில், மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, ‘குக்கு வித் கோமாளி’ புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் இந்த சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

மேலும், உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன் மற்றும் டிரைவர் ஷர்மிளா உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...