நியூ சவுத் வேல்ஸில் ஓபல் அட்டை முறைக்கு புதிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் 30 சதவீத கட்டணச் சலுகை வெள்ளிக்கிழமைகளிலும் வழங்கப்பட உள்ளது.
இதுவரை, இந்தச் சலுகை காலை 06.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 03 மணி முதல் இரவு 07 மணி வரையிலும், வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் அதிக நெரிசல் இல்லாத நேரங்களாகக் கருதப்பட்டது.
எவ்வாறாயினும், ஒரு வாரத்திற்குள் 08 பயணங்களை நிறைவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தில் பாதியளவிலான சலுகையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப இந்த ஓபல் கட்டண சலுகை வழங்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த திருத்தங்கள் அனைத்தும் அக்டோபர் 16 முதல் அமலுக்கு வரும்.