Melbourneமனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் - 1 பில்லியன் டொலர்...

மனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் – 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு

-

மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்த்ததால் தமது மன நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மெல்போர்னில் உள்ள மருத்துவமனை மீது இழப்பீடு கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெல்போர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனை மீது சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டு அனில் கொப்புல என்ற அவுஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ராயல் மகளிர் மருத்துவமனையில் கடந்த 2018 ஜனவரி மாதம் அனில் கொப்புலவின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்க்க அனுமதித்ததன் மூலம் தொடர்புடைய மருத்துவமனை தமக்கு செய்ய வேண்டிய கடமையை மீறியதாக கொப்புலா தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உளவியல் பாதிப்பை ஏற்பட்டதன் காரணமாக தனக்கு நஷ்டஈடு தர வேண்டியுள்ளதாக கொப்புலா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பு காரணமாக தமது திருமண உறவே பாதிக்கப்பட்டது என்றார். ஆனால் ராயல் மகளிர் மருத்துவமனை எந்த விதி மீறலையும் முன்னெடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

அனில் கொப்புலா 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் இழப்பீடு அளிக்கும் வகையில், அவரது உளவியல் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.

ஆனால் அந்த மருத்துவ ஆய்வறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், தொடர்புடைய விவகாரத்தில் கொப்புலாவுக்கு எந்தவிதமான பொருளாதார நஷ்டமும் ஏற்படவில்லை என்பதாலும், அவரது நோய் கடுமையான பாதிப்பு என்று கருதப்படுவதற்கான வரம்பை அடையாததாலும், கொப்புலாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...