Melbourneமனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் - 1 பில்லியன் டொலர்...

மனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் – 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு

-

மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்த்ததால் தமது மன நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மெல்போர்னில் உள்ள மருத்துவமனை மீது இழப்பீடு கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெல்போர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனை மீது சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டு அனில் கொப்புல என்ற அவுஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ராயல் மகளிர் மருத்துவமனையில் கடந்த 2018 ஜனவரி மாதம் அனில் கொப்புலவின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்க்க அனுமதித்ததன் மூலம் தொடர்புடைய மருத்துவமனை தமக்கு செய்ய வேண்டிய கடமையை மீறியதாக கொப்புலா தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உளவியல் பாதிப்பை ஏற்பட்டதன் காரணமாக தனக்கு நஷ்டஈடு தர வேண்டியுள்ளதாக கொப்புலா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பு காரணமாக தமது திருமண உறவே பாதிக்கப்பட்டது என்றார். ஆனால் ராயல் மகளிர் மருத்துவமனை எந்த விதி மீறலையும் முன்னெடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

அனில் கொப்புலா 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் இழப்பீடு அளிக்கும் வகையில், அவரது உளவியல் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.

ஆனால் அந்த மருத்துவ ஆய்வறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், தொடர்புடைய விவகாரத்தில் கொப்புலாவுக்கு எந்தவிதமான பொருளாதார நஷ்டமும் ஏற்படவில்லை என்பதாலும், அவரது நோய் கடுமையான பாதிப்பு என்று கருதப்படுவதற்கான வரம்பை அடையாததாலும், கொப்புலாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Latest news

80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

Google அதன் செயற்கைக்கோள் படத் தளமான Google Earth பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளுடன் பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மேம்பாடு, தனிநபர்களை...

உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் – வைரலாகும் வீடியோ

சமீபத்தில், சீனாவின் Hangzhou-வில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ‘Regent International’ என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட...

16 நாடுகளில் பரவிய புதிய கோவிட் வைரஸ் – ஆஸ்திரேலியாவிற்கும் வர வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் XEC எனப்படும் புதிய கோவிட் வகை கண்டறியப்பட்டது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் தடுப்பு மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் ஜேம்ஸ் ட்ரோவர், ஓமிக்ரான்...

இரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களின் பல பகுதிகளில் கடுமையான புயல் நிலை மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில்...

இரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களின் பல பகுதிகளில் கடுமையான புயல் நிலை மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில்...

உலகின் Friendly நகரங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய நகரம்

2024 ஆம் ஆண்டில் உலகின் நட்பு நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பெயரிடப்பட்டுள்ளது. சிஎன் டிராவலர் நடத்திய ஆய்வின்படி, உலகின் முதல் 10 நட்பு நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர்...