Newsநகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு - கழுகாய் சுற்றும் ரியல்...

நகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு – கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

-

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்கள் வரை விலை கொடுக்க பலர் தயாராக இருக்கும் நிலையிலும் நகரின் மையத்தில் வீட்டுடன் இருக்கும் நிலத்தை விற்க ஜம்மித் என்பவரின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் ஜம்மித் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 1.9 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றில் ஜம்மித் என்பவரது குடும்பம் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியை சுற்றியுள்ள பிற பகுதிகள் முழுவதும் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

ஆனால் இவர்களது வீடு மட்டும் சுற்றிலும் பச்சையாக இயற்கையான அமைப்புடன் பெரும் நிலத்திற்கு நடுவே வீடு அமைந்துள்ளதால் மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் ஜம்மித்தின் நிலத்தை எப்படியாவது வாங்கி அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை வாங்க 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்காக 30 மில்லியன் டொலர் வரை ஜம்மித் குடும்பத்திற்கு வழங்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் அவர்களது அழகான நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜம்மித் குடும்ப உறுப்பினர் டையானே ஜம்மித் பேசிய போது, இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் விவசாய பகுதியாக இருந்தது, அதனால் இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வீடுகளாக உள்ளது, இருப்பினும் எங்களுக்கு இயற்கையான சூழலை விட்டு வெளியேற மனம் வரவில்லை, அதனால் இந்த நிலத்தை விற்பனை செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...