விக்டோரியாவில் வளர்ச்சியடையாத மற்றும் காலியாக உள்ள நிலங்களுக்கு புதிய வரி விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் இந்தச் சட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த மாநில அரசு நம்புகிறது.
தற்போது மெல்பேர்னில், 06 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத நிலத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
பெறுமதிமிக்க சொத்துக்களை அபிவிருத்தி செய்து பராமரிக்கும் நோக்கில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படுவதாக விக்டோரியா மாநில பொருளாளர் டிம் பலாஸ் தெரிவித்தார்.
விக்டோரியா கிரீன்ஸ் கட்சியின் தலைவர் சமந்தா ரத்னமும் இந்த பிரேரணையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.