Cinemaபூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- "உங்களுக்கு 15 நாள் தான் டைம்"

பூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- “உங்களுக்கு 15 நாள் தான் டைம்”

-

2018-ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் (இந்திய ரூபா) முன் பணம் வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், ஏ.ஆர். ரகுமான் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, “ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மேலாளரும், தி குரூப் நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில் வேலவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சங்கத்திடம் இருந்து இசை நிகழ்சசி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது.

இதற்கிடையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பு காரணமாக அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தனர். ரத்து செய்தாலும் முன்பணத்தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய அறுவைசிகிச்சை நிபுனர்கள் சங்கத்திற்கு எதிராக எ அர் ரஹ்மான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

அந்த நோட்டீஸில் ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க ​வேண்டும் என்றும், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டுமென்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...