நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள குயின்ஸ்டவுன் நகரம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து பயணிகள் விமான நிலையத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.
பின்னர் விமான நிலையம் மூடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதில் எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் பிறகு இது பொய்யான தகவல் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விமானங்கள் அங்கிருந்து பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நியூசிலாந்தில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்