Sports81 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி - உலக கிண்ண...

81 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று ஹைத்ராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக Saud Shakeel மற்றும் Mohammad Rizwan ஆகியோர் தலா 68 ஓட்டங்களை பெற்றனர்.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

பதிலுக்கு 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 67 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக Haris Rauf, 3 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...