Sports81 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி - உலக கிண்ண...

81 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று ஹைத்ராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக Saud Shakeel மற்றும் Mohammad Rizwan ஆகியோர் தலா 68 ஓட்டங்களை பெற்றனர்.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

பதிலுக்கு 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 67 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக Haris Rauf, 3 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்குப் பிறகு காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மன் பெண்!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் இதுதான்!

கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. CNN பெற்ற அறிக்கையின்படி, விமானியின் காக்பிட்டில்...

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

வீட்டு விலைகள் முதல் முறையாக $1 மில்லியனைத் தாண்டியுள்ள மாநிலத் தலைநகரம்

பிரிஸ்பேர்ண் நகரில் முதல் முறையாக சராசரி வீட்டு விலைகள் ஏழு இலக்க, பல மில்லியன் டாலர் மதிப்பிலான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கோட்டாலிட்டியின் பகுப்பாய்வின்படி, குயின்ஸ்லாந்து தலைநகரில்...