கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு கூடுதல் விமானங்களை இயக்க மறுக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய செனட் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை செனட் குழு தனது முதல் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு உரிய முடிவை ஆராய்வதற்காக வழங்கியுள்ளது.
உள்நாட்டு விமானப் பயணத்தின் மீதான ஒழுங்குமுறை அதிகாரங்கள் மீண்டும் ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்பது பரிந்துரைகளில் உள்ளது.
இந்த செனட் குழுவில் முன்னாள் Qantas CEO Alan Joyce மற்றும் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்க போக்குவரத்து அமைச்சர் Catherine King ஆகியோர் சாட்சியமளிக்கும் வரை குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை பெறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த 10 குழு பரிந்துரைகளும் செனட் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாகவும், ஏகமனதான அனுமதியின் கீழ் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.