ஆஸ்திரேலிய ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளர் எடி ஜோன்ஸ் தனது பதவியை விட்டு விலகத் தயாராகி வருவதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் ரக்பி அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கும் நோக்கில் அவர் தனது பதவியை விட்டு விலக தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, எடி ஜோன்ஸ் ரக்பி பயிற்சியாளர் பதவியை ஏற்க ஜப்பானில் இருந்து அழைப்புகளைப் பெற்றார், ஆனால் அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த சலுகைகளை நிராகரித்தார்.
2027ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய ரக்பி அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், ஒப்பந்தத்தை பாதியில் நிறுத்தத் தயாரில்லை என்று அவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், புதிய ரக்பி பயிற்றுவிப்பாளராக எடி ஜோன்ஸ் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருட ரக்பி உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய ரக்பி அணியின் மோசமான ஆட்டம் காரணமாக எடி ஜோன்ஸ் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.