வார இறுதியில் சிட்னியில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான பேரணிக்கு முன்னதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் சிறப்பு பொலிஸ் அதிகாரங்களைப் பெறத் தயாராகி வருகின்றனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்பவர்களை காரணமின்றித் தேடி அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு.
கடந்த திங்கட்கிழமை ஓபரா ஹவுஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது நடந்தது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
வார இறுதி நாட்களில் பேரணி நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது கூட்டமாக மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் யூத மக்களின் பாதுகாப்பு அதிகபட்சமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற தற்காலிக விசாவில் உள்ள அனைவரையும் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கருத்து தெரிவித்துள்ளார்.