Sportsபங்களாதேஷ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி - உலக கிண்ண தொடர்...

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023 ஆம் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக, முஷ்பிகுர் ரஹீம் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், நியூசிலாந்து அணியின் லொக்கி பெர்குசன் 49 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

246 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, டேரில் மிட்செல் 89 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

நன்றி தமிழன்

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் சுனாமி அபாயம்

இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை மீண்டும் வெடித்துள்ளதால், சுனாமி அபாயம் காரணமாக சுமார் 12,000 பேரை வெளியேற்றும் பணியில் இந்தோனேசிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதத்தில் ருவாங் எரிமலை...

“ஹாரி பாட்டர் கோட்டை” ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் அழிக்கப்பட்டது

உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரத்தில் உள்ள 'Harry Potter Castle' என்ற புகழ்பெற்ற கட்டிடம் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன்...

வெப்பமான காலநிலை காரணமாக பல ஆசிய நாடுகளில் சுகாதார எச்சரிக்கைகள்

வெப்பமான காலநிலை காரணமாக, பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மின்சார அமைப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படும் என...

நியூ சவுத் வேல்ஸில் தங்கையை கத்தியால் குத்திய சகோதரி

10 வயது சிறுமி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி, 17 வயதுடைய சந்தேகநபர்...

வெப்பமான காலநிலை காரணமாக பல ஆசிய நாடுகளில் சுகாதார எச்சரிக்கைகள்

வெப்பமான காலநிலை காரணமாக, பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மின்சார அமைப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படும் என...

மெல்போர்ன் உட்பட பல விமான நிலையங்களில் போன்சா விமானங்கள் ரத்து

போன்சா ஏர்லைன்ஸின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு இலவச விமான சேவையை வழங்க விர்ஜின் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. பட்ஜெட் விமான நிறுவனமான...