Sportsதென்னாபிரிக்க அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

தென்னாபிரிக்க அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் 34 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து ,312 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக மார்னஸ் லபுஸ்காக்னே 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.   

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...