Sportsபங்களாதேஷ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி - உலக கிண்ண தொடர்...

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023 ஆம் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக, முஷ்பிகுர் ரஹீம் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், நியூசிலாந்து அணியின் லொக்கி பெர்குசன் 49 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

246 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, டேரில் மிட்செல் 89 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

நன்றி தமிழன்

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...