Newsபலஸ்தீனத்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவர்

பலஸ்தீனத்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவர்

-

அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 32 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் குறித்த பெண்ணின் 6 வயது மகன் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்துள்ளார்.

திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கியுள்ளார். 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதைகண்ட அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார்.அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார்.

ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

கத்திக் குத்திற்கு இலக்கான இருவரையும் மீட்டு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிறுவன் உயிரிழந்தார்.

சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...