அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் இறந்த உடல்களை தகனம் செய்யும் ‘ரிட்டர்ன் டூ நேச்சர்’ என்ற அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
இரசாயன திரவங்களைப் பயன்படுத்தி எம்பாமிங் செய்யாமல் வைத்திருந்து இயற்கையான முறையில் உடல் தகனம் என இந்த அமைப்பு விளம்பரப்படுத்தி இறந்தோரின் உடல்களை தகனம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறித்த சோதனையில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட இந்த 189 உடல்களுக்கும் பதிலாக, உடல்கள் எரியூட்டப்பட்டுவிட்டதாகக் கூறி, அவர்களின் உறவினர்களுக்கு போலியாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலராடோ மாகாணத்திற்கே இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தமிழன்