Newsஅமெரிக்காவில் அழுகிய நிலையில் 189 உடல்கள் மீட்பு

அமெரிக்காவில் அழுகிய நிலையில் 189 உடல்கள் மீட்பு

-

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் இறந்த உடல்களை தகனம் செய்யும் ‘ரிட்டர்ன் டூ நேச்சர்’ என்ற அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

இரசாயன திரவங்களைப் பயன்படுத்தி எம்பாமிங் செய்யாமல் வைத்திருந்து இயற்கையான முறையில் உடல் தகனம் என இந்த அமைப்பு விளம்பரப்படுத்தி இறந்தோரின் உடல்களை தகனம் செய்து வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறித்த சோதனையில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட இந்த 189 உடல்களுக்கும் பதிலாக, உடல்கள் எரியூட்டப்பட்டுவிட்டதாகக் கூறி, அவர்களின் உறவினர்களுக்கு போலியாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலராடோ மாகாணத்திற்கே இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

சார்லஸ் மன்னர் தனது மகனுக்கு வழங்கிய பதவி

வேல்ஸ் இளவரசர் மூன்றாம் சார்லஸின் மகன் இளவரசர் வில்லியமுக்கு பிரித்தானிய ராயல் விமானப்படையின் கர்னல் இன் தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ராணுவ விமான...

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய பட்ஜெட் அமைப்பு

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய துரித கடவுச்சீட்டு நடைமுறையை ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. சாதாரண அமைப்பிற்கு கூடுதல் $100 செலுத்துவதன்...

வீட்டுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து பல நிவாரணங்கள்

மத்திய பட்ஜெட் வீட்டு நெருக்கடி நிவாரணத்திற்காக $11 பில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பொருளாளர் ஜிம் சால்மர்ஸ், குத்தகைதாரர்களின் பிரச்சினையில் அரசாங்கத்தின் கவனம்...

வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து நிவாரணம்

காமன்வெல்த் வாடகை உதவி பெறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக 10 சதவீதம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பணவீக்கத்தை...

குடியேற்றமும் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின் மூலம் வெளிநாட்டு குடியேற்றத்தை குறைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நிகர இடம்பெயர்வு 528,000...

மத்திய பட்ஜெட்டில் இருந்து ஆஸ்திரேலியர்களுக்கு பல நிவாரணங்கள்

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆஸ்திரேலியர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள $3.5 பில்லியன் தொகுப்பின் கீழ், நாட்டில் உள்ள ஒவ்வொரு...