NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி தவமணி குலசிங்கம்

மரண அறிவித்தல் – திருமதி தவமணி குலசிங்கம்

-

இலங்கை தெகிவளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்போர்ண் Mulgrave வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணி குலசிங்கம் அவர்கள் 19 ஒக்டோபர் 2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான புத்திசிகாமணி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா குலமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், செல்வராஜா, பத்மநாதன், சிதம்பரநாதன் ஆகியோரின் சகோதரியும், தவசிங்கம் (தவா), யோகசிங்கம் (ராஜ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாலினி, வத்ஷலா ஆகியோரின் மாமியாரும், நிரோஷினி- (Lynton), டீலிப், கிரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், பெனலப்பீ (Penelope)ன் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ஒக்டோபர் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.15 மணிமுதல் 11.30 மணிவரை  Stratus Chapel Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Dandenong South, VIC 3175 என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Gold Coast-ல் அதிகரித்துவரும் தற்கொலைகள்

Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த...

விக்டோரியாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி

விக்டோரியாவில் பள்ளிப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக $22.5 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதியிலிருந்து 46 பள்ளிகள் பயனடையும் என்று கல்வி அமைச்சர்...

இலவச மின்சாரம் வழங்கும் Solar Sharer எவ்வாறு செயல்படும்?

அரசு அறிவித்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. Solar Sharer என்று அழைக்கப்படும் இந்த...