Newsஆந்திராவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -19 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -19 பேர் உயிரிழப்பு

-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமங்கள் நிலவுகிறது. பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் இடம்பெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதலமைச்சர் அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் திகதி சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந்தது.

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் இன்று இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டும் ‘Cashrewards’ இணையதளம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான cashback வலைத்தளமான Cashrewards, இன்று முதல் அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. புதிய பரிவர்த்தனைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது இன்று மதியம் 12 மணிக்குப் பிறகு...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...