Newsஏலம் விடப்பட்ட டைட்டானிக் கப்பலின் 'Menu Card'

ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கப்பலின் ‘Menu Card’

-

டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

இதில் கப்பலில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலத்திற்கு வர உள்ளது.

இது தொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் தெரிவிக்கையில், கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.

இது அவரது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது. 2017 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் பார்வையிட்ட நிலையில் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர் என தெரிவித்தார்.

விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த மெனு கார்டில் பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ‘மெனு கார்டு’ 60 ஆயிரம் யூரோவிற்கு ஏலம் விடப்படுகின்றது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...