Melbourneமெல்போனில் வாழும் இலங்கை குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்

மெல்போனில் வாழும் இலங்கை குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்

-

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று இளைஞர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த குடும்பத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் சிறுமியின் தந்தை வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறித்த தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் சிசிடிவி கெமராக்கள் வேலை செய்யவில்லை என பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளனர். 

ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை மேயரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...

சதுரங்க ஜாம்பவானை தோற்கடித்த பத்து வயது சிறுமி

பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளைய சதுரங்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின்...

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...

அடிலெய்டின் CBD-யில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து

அடிலெய்டின் CBD-யில் உள்ள Hindley தெருவில் உள்ள ஒரு உணவு வணிகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு லட்சக்கணக்கான டாலர்களில் மதிப்பிடப்பட்டுள்ளது. Hindley தெருவில் மதியம் 1:45...