5 நாட்களுக்குப் பின்னர், கடந்த புதன்கிழமை கிட்டத்தட்ட 13 மணிநேரம் Optus தொடர்பாடல் சேவை தோல்வியடைந்தமைக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
வழக்கமான மென்பொருள் புதுப்பித்தலுக்குப் பிறகு செய்யப்பட்ட பல மாற்றங்கள் அதை பாதித்துள்ளதாக அவர்கள் இன்று அறிவித்தனர்.
சுமார் 10.2 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், கடந்த புதன்கிழமை அதிகாலை 04.05 மணியளவில் ஏற்பட்ட தொடர்புடைய பிழை காரணமாக சுமார் 400,000 வணிகங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தில் சிரமத்திற்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக தலா 200 ஜிகாபைட் கூடுதல் டேட்டா வழங்குவதாக Optum உறுதியளித்துள்ளது.
ஆனால், இது வெறும் ஏமாற்று வேலை என்று பலர் குற்றம்சாட்டினர்.