Newsசினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

சினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

-

இலங்கையிலிருந்து வந்த தொழிலதிபர் ஒருவரை சென்னையில் கடத்தி வைத்துக் கொண்டு ஒரு கும்பல் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறது.

அவரது மகளும் முதல் தவணையாக 95 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் கொடுத்து இருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ? சென்னை போலீசாருக்கு தனது தந்தை கடத்தப்பட்டது பற்றி தகவல் தெரிவித்து விட்டார்.

தொழிலதிபர் பயன்படுத்திய இந்திய செல்போன் சிம் கார்டை ஆராய்ந்தபோது சென்னையில் கேகே நகர் பகுதியில் நடமாடியதாக காட்டியது.

இன்னொரு பக்கம் தொழிலதிபரின் மகள், கடத்தல் கும்பல் அனுப்பிய ஒரு வீடியோ கிளிப்பிங்கின் ஸ்க்ரீன் ஷாட்டை போலீசாரிடம் பகிர்ந்திருந்தார.

அந்த போட்டோவை போலீசார் ஜூம் செய்து பார்த்ததில் பேக்ரவுண்டில் ஒரு விளம்பரப் பலகை இருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட ஓட்டலில் வைத்துதான் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

பிறகு என்ன? ஹோட்டலில் புகுந்து தொழிலதிபரை மீட்டதுடன் ஏழு பேரை நேற்று போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடத்தல் கும்பலில் 43 வயது பெண்ணும் அடக்கம்.

விரிவான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

கமலின் வெற்றி விழா படத்தில் குஷ்புவை இப்படித்தான் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

எந்த குளூவும் கிடைக்காத நேரத்தில், குஷ்புவை வைத்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ பேக் ட்ராப்பில் டிஜிட்டல் போர்டு சோப் விளம்பரம் ஒன்று தெரியவரும்.

அதை வைத்து, குஷ்பு அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிப்பார்கள்.

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...