Newsசினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

சினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

-

இலங்கையிலிருந்து வந்த தொழிலதிபர் ஒருவரை சென்னையில் கடத்தி வைத்துக் கொண்டு ஒரு கும்பல் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறது.

அவரது மகளும் முதல் தவணையாக 95 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் கொடுத்து இருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ? சென்னை போலீசாருக்கு தனது தந்தை கடத்தப்பட்டது பற்றி தகவல் தெரிவித்து விட்டார்.

தொழிலதிபர் பயன்படுத்திய இந்திய செல்போன் சிம் கார்டை ஆராய்ந்தபோது சென்னையில் கேகே நகர் பகுதியில் நடமாடியதாக காட்டியது.

இன்னொரு பக்கம் தொழிலதிபரின் மகள், கடத்தல் கும்பல் அனுப்பிய ஒரு வீடியோ கிளிப்பிங்கின் ஸ்க்ரீன் ஷாட்டை போலீசாரிடம் பகிர்ந்திருந்தார.

அந்த போட்டோவை போலீசார் ஜூம் செய்து பார்த்ததில் பேக்ரவுண்டில் ஒரு விளம்பரப் பலகை இருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட ஓட்டலில் வைத்துதான் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

பிறகு என்ன? ஹோட்டலில் புகுந்து தொழிலதிபரை மீட்டதுடன் ஏழு பேரை நேற்று போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடத்தல் கும்பலில் 43 வயது பெண்ணும் அடக்கம்.

விரிவான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

கமலின் வெற்றி விழா படத்தில் குஷ்புவை இப்படித்தான் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

எந்த குளூவும் கிடைக்காத நேரத்தில், குஷ்புவை வைத்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ பேக் ட்ராப்பில் டிஜிட்டல் போர்டு சோப் விளம்பரம் ஒன்று தெரியவரும்.

அதை வைத்து, குஷ்பு அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிப்பார்கள்.

Latest news

சூப்பர் மார்க்கெட்டில் பெற்றோரை ஏமாற்றிய இளைஞனுக்கு வழங்கப்பட்ட தண்டனை

குயின்ஸ்லாந்தில் உள்ள வணிக வளாகத்தில் கும்பல் ஒன்று தலையை துண்டிக்கத் தயாராகும் போலி வீடியோவை வெளியிட்ட 27 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மார்ச்...

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு வெளியான சோகமான தகவல்

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பவர் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மோசடியான ஆட்சேர்ப்பு நடைமுறைகள்...

ஆஸ்திரேலியாவில் பிரபல நிறுவனம் வாரத்தில் 4 நாள் வேலை செய்ய அனுமதிக்க திட்டம்

Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலியின் சுமார் 14,000 ஊழியர்களை வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்ய அனுமதிக்கும் திட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. நிறைவேற்றப்பட்டால்,...

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஆஸ்திரேலியாவில் பிரபல நிறுவனம் வாரத்தில் 4 நாள் வேலை செய்ய அனுமதிக்க திட்டம்

Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலியின் சுமார் 14,000 ஊழியர்களை வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்ய அனுமதிக்கும் திட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. நிறைவேற்றப்பட்டால்,...

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி – IPL 2024

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின்...