Cinemaகதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

கதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

-

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார்.

இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது.

சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மஹாராஜா துலீப் சிங்கின் மகள் சோபியா துலீப் சிங் வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் வாழும் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது.

பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கதீஜா ரஹ்மான் பேசும்போது, “லயனஸ் படத்தில் வேலை செய்வதை கெளரவமாகவும் அதே நேரம் சுவாரசியமாகவும் உணர்கிறேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டது முதலே இதனோடு பிணைக்கப்பட்டுவிட்டேன். இளவரசி சோபியாவின் போராட்டத்துக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைப்பதே எங்களின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

2020-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ஃபரிஷ்தா என்கிற பாடலை கதீஜா பாடினார். அதன் பிறகு இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பாடகர் அறிவு ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய கதீஜா, தமிழில் இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...