Newsபோரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

போரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

-

இஸ்ரேல் அரசு முதல்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு முறை 10 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஸா, ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டுள்ளது, இது முழு சுற்றுப்புறங்களையும் சமன் செய்துள்ளதுடன் பலருக்கு மரணத்தையும் அழிவையும் அளித்துள்ளது.

இஸ்ரேல், முற்றுகையிட்ட காஸாவின் வெறும் 365 சதுர கிலோமீற்றர் அளவுப்பகுதியில் 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது.

காசாவின் 222,000 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 40,000 க்கும் மேற்பட்டவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அழிவுகள் வடக்கு காஸாவில் மையம் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பான வலயமாக அறிவித்திருந்த தெற்குப்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...