Cinemaஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் அஜித்குமார்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் அஜித்குமார்

-

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அஜர்பைஜானில் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நடிகை த்ரிஷா இனைந்துள்ளதுடன் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார் என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது என்றும் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவ் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ள தகவல் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...