Cinemaஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் அஜித்குமார்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் அஜித்குமார்

-

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அஜர்பைஜானில் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நடிகை த்ரிஷா இனைந்துள்ளதுடன் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார் என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது என்றும் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவ் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ள தகவல் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பணம் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் இளைஞர் சமூகம் என்ன செய்கிறது?

ஆஸ்திரேலியாவின் இளைய தலைமுறையினரில் சுமார் 40 சதவீதம் பேர் இன்னும் பெற்றோருடன் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. புதிய தரவுகளின்படி, ஆஸ்திரேலியர்கள் தங்கள் பெற்றோருடன்...

4.1 சதவீதம் அதிகரித்துள்ள தொழிலாளர்களின் சம்பளம் – ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம்

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மார்ச் காலாண்டில் ஊதியங்கள் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. 2023 டிசம்பர் காலாண்டில் ஊதியங்கள்...

மூடப்படவுள்ள 70 ஆண்டுகளாக மெல்போர்னில் பிரபலமாக இருந்த இத்தாலிய உணவு நிறுவனம்

பல தசாப்தங்களாக ருசியான இத்தாலிய உணவுகளுடன் மெல்போர்ன் உணவுகளை வழங்கிய நிறுவனம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட உள்ளது. தற்போதைய உரிமையாளர்களான ஜான் மற்றும் ரோஸ்மேரி போர்டெல்லி...

எரிசக்தி கட்டண நிவாரணம் குறித்து அரசுக்கு எழுந்துள்ள சிக்கல்

மத்திய பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்ட எரிசக்தி கட்டண நிவாரணம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்களுக்கும் பொருந்துமா என்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளை வைத்திருக்கும் ஆஸ்திரேலியர்களும்...

மெல்போர்னில் உள்ள இரண்டு முக்கிய உணவகங்களில் தீ விபத்து

மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தில் உணவகங்கள் எரிந்து நாசமானதை அடுத்து, குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரபல உணவகங்களுக்குள் சந்தேகத்திற்கிடமான தீ...

எரிசக்தி கட்டண நிவாரணம் குறித்து அரசுக்கு எழுந்துள்ள சிக்கல்

மத்திய பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்ட எரிசக்தி கட்டண நிவாரணம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்களுக்கும் பொருந்துமா என்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளை வைத்திருக்கும் ஆஸ்திரேலியர்களும்...