Cinemaதனது எடை சாதனைகளை வெளியிட்டுள்ள பிரபல நடிகர் அர்னால்ட்

தனது எடை சாதனைகளை வெளியிட்டுள்ள பிரபல நடிகர் அர்னால்ட்

-

ஆஸ்திரியா நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான இவர், 15 வயது முதல் தொழில்முறை உடலமைப்பாளராக(Body Builder) விளங்க விருப்பம் கொண்டு பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தற்போதும் பல நட்சத்திர உடலமைப்பாளர்களுக்கு கனவு நாயகனாக திகழ்கிறார். உடற்பயிற்சி குறித்த பல ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் எடை பயிற்சியில் மிக முக்கியமான 3 பயிற்சிகளாக கருதப்படும் ஸ்க்வாட் (squat), டெட் லிஃப்ட் (dead lift) மற்றும் பெஞ்ச் பிரஸ் (bench press) ஆகியவற்றில் தனது எடை சாதனைகளை குறித்து அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது-

“பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் எனது அதிகபட்ச எடை 238 கிலோகிராம். எனது சிறப்பான டெட் வெய்ட் 322 கிலோகிராம்களை எட்டியது. எனது அதிகபட்ச ஸ்க்வாட் எடை 276 கிலோகிராம்கள். என்னுடைய காலகட்டத்தில் இவை ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை வழக்கமாக உலகம் முழுவதும் பலரால் பயிற்சி செய்யக்கூடிய எடையாக மாறியுள்ளது.அது ஒரு காலம். ஆனாலும், தினசரி ஜிம்முக்கு செல்வதை நான் நிறுத்தியதில்லை; அதில் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. ஓய்வு எடுக்க தொடங்கினால், துரு பிடித்து விடுவோம்” என அர்னால்ட் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...