Newsவீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த கொடிய விஷப் பாம்பு!

வீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த கொடிய விஷப் பாம்பு!

-

அவுஸ்திரேலியாவில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் இருந்து விஷ பாம்பு ஒன்றை சிறுவன் கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் கொடூர விஷ தன்மையுடைய பாம்பு ஒன்று இருப்பதை அந்த வீட்டின் சிறுவன் கண்டுபிடித்த பிறகு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதையடுத்து சிறுவனின் தாய் தங்களுடைய வரவேற்பறையில் கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) ஊடுருவி இருப்பதாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

நியூஸ்வீக் வழங்கிய தகவல் அடிப்படையில், குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த Drew Godfrey என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

பின் பாம்பை லாவகமாக பிடித்த Drew Godfrey இது தொடர்பான வீடியோ காட்சிகளை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த மீட்பு குறித்து பத்திரிக்கைக்கு Drew Godfrey வழங்கிய தகவலில், கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) உலகின் 2வது கொடிய விஷத் தன்மை கொண்ட தரைப் பாம்பு என்று தெரிவித்துள்ளார்.

இது கிழக்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் பாம்பு கடியால் உயிரிழந்த பெரும்பாலானோருக்கு இந்த கிழக்கு பழுப்பு பாம்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த பாம்புகள் ஏறக்குறைய 50 முதல் 60 செ.மீ நீளம் வளரக்கூடியது. அத்துடன் இதனை கையாளுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது அத்துடன் தற்போது வீட்டில் பிடிபட்டுள்ள பாம்பு இளம் வயதுடையது என்று பாம்பு பிடிப்பவர் Godfrey உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...