Newsஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்

ஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்

-

பெற்றோர்களில் 94 சதவீதமானோர், தங்கள் குழந்தைகளின் மனநலம் ஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் 91 சதவீதமானோர், இதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சில கட்டுப்பாடுகள் வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

ஸ்மாா்ட்போனின் பயன்பாடு தவிா்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளமையால் பெற்றோா்கள்-குழந்தைகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் 1,000 பெற்றோா்கள், 500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்,‘பெற்றோா்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7.42 மணிநேரம் ஸ்மாா்ட்போனை பயன்படுத்துகின்றனா். இவ்வாறு பயன்படுத்தும் நேரத்தில், குழந்தைகள் ஏதாவது கேட்கும்போது தங்களுக்கு கோபம் ஏற்படுவதாக 90 சதவீத பெற்றோா்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மாா்ட்போனின் அதீத பயன்பாடு தங்கள் குழந்தைகளின் சமூகத் தொடா்புக்கான திறன்களைப் பாதிப்பதாக அவா்களில் 91 சதவீதம் போ் கவலை தெரிவித்துள்ளனர்.

சராசரியாக, 12 வயதில் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகள், அவற்றை சுமாா் 6.30 மணிநேரம் பயன்படுத்துவதுடன், அதில் விளையாட்டுகளில் (Gaming) பெரும்பாலான நேரத்தைக் கழிக்கின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளில் 60 சதவீதம் போ் தகவல்-பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதாகவும் 50 சதவீதம் போ் தொலைதூரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரைத் தொடா்புகொள்வதற்காக பயன்படுத்துவதாகவும் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...