Newsஆஸ்திரேலியாவில் தவறுதலாக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தாய்

ஆஸ்திரேலியாவில் தவறுதலாக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தாய்

-

ஆஸ்திரேலியாவில் 4 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட தாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 1989 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் காலேப், பேட்ரிக், சாரா, லாரா, ஆகிய நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களுடைய தாய் கேத்லீன் போல்பிக்கின்(Kathleen Folbigg) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கேத்லீன் போல்பிக்கின் தன்னுடைய 4 குழந்தைகளையும் அடித்தே கொன்றதாக குற்றம் சாட்டியதுடன் 2003ம் ஆண்டு கொலையாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின் மேல்முறையீட்டில் அவருக்கான சிறை தண்டனை 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

தான் குழந்தைகளை கொலை செய்யவில்லை என தெரிவித்து தாய் கேத்லீன் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 2019 ஆண்டு விசாரணையின் போதும் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

இறுதியில் 2022ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் மீது நியாயமான சந்தேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியூ செளத் வேல்ஸ் மாகாண இந்த ஆண்டு ஜூன் மாதம் தாய் கேத்லீனை மன்னித்து சிறையில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் 4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய் கேத்லீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நம்பமானதாக இல்லை என தெரிவித்து நியூ செளத் வேல்ஸ் நீதிமன்றம் அவரை இன்று இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

அதே சமயம் இத்தனை ஆண்டுகள் சிறையில் தவறுதலாக அடைக்கப்பட்ட கேத்லீனுக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது வழக்கறிஞர் ரனீ ரெகோவின் சட்டக்குழு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...