Newsவெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

-

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவான ஆண்டாக 2023 கருதப்படுகிறது.

பல பிரதேசங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.

அது தொடர்பில் அவதானம் செலுத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம், தற்போதைய நிலைமை தொடர்பில் மாநில அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது.

அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் அங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களில் அவுஸ்திரேலியாவை பாதித்த வெப்பமான காலநிலை காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மற்றும் நலன்புரி அவுஸ்திரேலியா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

 சமூக ஊடகங்கள் தொடர்பாக கடுமையான முடிவை எடுக்கும் அவுஸ்திரேலிய மாநிலம்

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்வதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை...

எஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியில் பிரபல யூடியூபர் டாரன் ஜாசனை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது. 'ஸ்பீடு' என்று அறியப்படும் டாரன்...

NSW மக்களுக்கு புயல் வானிலை எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸில் எதிர்வரும் நாட்களில் புயல் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலைக்கு தயாராகுமாறு அவசரகால அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில்...

வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடவுச்சீட்டு குறித்து சிறப்பு அறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டில் விசேட கவனம் செலுத்துமாறு வெளிவிவகார திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு இத்தாலியில்...

வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடவுச்சீட்டு குறித்து சிறப்பு அறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டில் விசேட கவனம் செலுத்துமாறு வெளிவிவகார திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு இத்தாலியில்...

தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் அனுப்பும் விக்டோரியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, இணையத்தில் மிகவும் தனிப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து...