Sportsதோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

-

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க BCCI முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி வழங்கியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக BCCI இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக வலம் வந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதி தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்தார்.

மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த இலக்கம் 7 ஜேர்சி எந்த ஒரு வீரருக்கும் வழங்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியும் அவரது ஓய்வுக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு இலக்கம் 10 ஜேர்சி அணியை அணிவதற்கு விருப்பம் தெரிவித்த ஷர்துல் தாக்குர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன்பின், எந்த ஒரு வீரரும் சச்சினின் நம்பர் 10 ஜேர்சி அணிந்து விளையாடவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த வீரர். இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக நம்பர் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, BCCI விரைவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்கும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

புலம்பெயர்ந்தோரை பயமுறுத்தும் அவமானகரமான வார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ஜெசிந்தா

விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ஒரு அறிக்கையில், நாட்டிற்கு வாழ்ந்து பங்களிக்கும் மக்களின் நோக்கங்கள் குறித்து பயத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கு வரம்புகள் விதிக்கப்பட...

ஆஸ்திரேலியர்களுக்கு இன்று முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் நாளை ஒரு அரிய இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று அதிகாலை ஆஸ்திரேலியா முழுவதும் முழு சந்திர கிரகணம் தெரியும், அதிகாலை 3:30 மணியளவில்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...