இருநூறுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இஸ்ரேலுடனான உறவுகளில் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அரசுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பான கடிதத்தில் தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் லிபரல், லேபர் மற்றும் கிரீன் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளனர்.
குறித்த கடிதத்தில் இரண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான மற்றும் இனியும் சகித்துக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் சூழலில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் சிக்கலில் இருப்பதாக கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறான நிலையில் இஸ்ரேலுடனான உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காசாவில் நிலையான போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடந்த வாரம் வலியுறுத்தினார்.
பிரகடனத்திற்கு அப்பால் சென்று அதனை நடைமுறைப்படுத்துவதில் தலையிட வேண்டும் என கடிதத்தில் கையெழுத்திட்ட அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.