Newsவிக்டோரியாவில் மின்சார விநியோகத்திற்கான தொடர் செயல்பாடுகள்

விக்டோரியாவில் மின்சார விநியோகத்திற்கான தொடர் செயல்பாடுகள்

-

விக்டோரியாவின் பல பகுதிகளில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக Powerco கூறுகிறது.

மோசமான வானிலை காரணமாக வடக்கு, மத்திய மற்றும் மேற்கு விக்டோரியாவில் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பவர்கோ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இணைப்புகளை மீட்டெடுக்கும் பணியில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு விக்டோரியா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார விநியோக வலையமைப்பில் சுமார் 240 பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

மின்னல் காரணமாக விநியோக வலையமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரங்கள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, இந்த மோசமான வானிலை நாளை வரை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...